வாலாஜாபேட்டை தலைமை அரசு மருத்துவமனைக்கு மின்தடை ஏற்படும் நாட்களில் ஸ்கேன்,சிடி ஸ்கேன் மற்றும் மருத்துவமனைக்கு மின்சாரம் தட்டுப்பாடு இல்லாமல் இருக்க தனிநபர் முயற்சியால் சமூக ஆர்வலர் அலி அகமத் அவர்களால் மின்மாற்றி 250 KV கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு அதாவது ட்ரான்ஸ்பர் அவரின் விடாமுயற்சியால் பெற பெற்றது. அவை குறைந்தபட்சம் 10 லட்சம் செலவில் கேபிள் வயர்களும் சில உபகரணங்களும் வாங்க முடியாமல் இந்நாள் வரை பனி நின்று கொண்டிருக்கிறது.
ஒரு சில மாதங்களுக்கு முன்பு அந்த மின்மாற்றிலிருந்து மருத்துவமனைக்கு பனம் செலவழித்து மின்சாரம் கொடுக்க முடியாத சூழ்நிலையால் பொதுமக்களுக்கு பயன்பாட்டில் உள்ளது. இராணிப்பேட்டை சட்ட மன்ற உறுப்பினர் நிதியிலோ அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலோ இதுவரை செயல்படுத்த முடியவில்லை.
இந்தத் பணியின் தடைக்கு இதுவரை என்ன காரணம் யாரால் காரணம் என்று தெரியவில்லை.இன்னும் செயல்படுத்த முடியவில்லை என்றால் மாவட்ட நிர்வாகம் செயலற்று ப் போய் உள்ளது என்பதற்கு இதுவே ஓர் உதாரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
- சிறப்பு செய்தியாளர் சுரேஷ்குமார்.
No comments:
Post a Comment