உயிரிழந்தவர்க்கு உதவி பெற்று தந்த ராணிப்பேட்டை மாவட்ட ஐமுமுக பொறுப்புக் குழு தலைவர் வாலாஜா மஸ்தான். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 29 September 2023

உயிரிழந்தவர்க்கு உதவி பெற்று தந்த ராணிப்பேட்டை மாவட்ட ஐமுமுக பொறுப்புக் குழு தலைவர் வாலாஜா மஸ்தான்.


இராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பேஸ் 2 பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் லெதர் கம்பெனி ஒன்றில், மேற்கு வங்கத்தை சேர்ந்த நசீம்கான் (23) என்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.


இதனை மறைத்து உயிரிழந்த இளைஞருக்கு உதவித்தொகை கொடுக்க மறுத்த கம்பெனி நிர்வாகத்துடன், உரிய நிவாரணத் தொகை அளிக்கவில்லை என்றால் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக கம்பெனியை முற்றுகையிடுவோம் என்று பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ரூபாய் 7 லட்சம் நிதி உதவி பெற்று தரப்பட்டது, இராணிப்பேட்டை மாவட்ட பொறுப்பு குழு தலைவர் வாலாஜா மஸ்தான் அவர்களின் இந்த முயற்சியை பார்த்து, அந்த லெதர் கம்பெனியில் வேலையை பார்க்கக் கூடிய இதர வடநாட்டு தொழிலாளர்கள் பாராட்டி நன்றியை தெரிவித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.


- சிறப்பு செய்தியாளர் சுரேஷ்குமார்.

No comments:

Post a Comment

Post Top Ad