நாங்கள் ஒற்றுமையாகவும் எந்த வித பிரச்சணையில்லாமல் வாழ்ந்து வருகிறோம். சமீப காலமாக எங்கள் கிராமத்தில் வசிக்கும் மோகன் த/பெ.நந்தகுமார் என்பவர் கோவில் நிர்வாகிகளிடமும், பொதுமக்களிடமும் எந்தவித ஆலோசனை கேட்காமல் தன்னிச்சையாக இவர் இந்து முண்ணனி சார்பாக அறக்கட்ளை ஒன்றை அமைத்துள்ளார். இதனால் ஊரில் கலவரத்தையும், ஊரில் பிரிவனைகளையும் ஏற்படுத்தி வருகிறார். இவர் செய்யும் செயலால் பொதுமக்கள் பல பிரச்சனைகளுக்கு உள்ளாகின்றார்கள். மேலும் அனைவரும் மன உளைச்சளுக்கு ஆளாகியுள்ளார்கள்.
இவர் கோவில் நிர்வாகிகளிடத்தில் எந்தவிதத்திலும் நல்லது, கெட்டதற்கு பங்கு பெறுவதில்லை. கொண்டகுப்பம் கிராமத்தில் ஊர் பொதுமக்கள் சம்மதத்துடன் கோவில் தர்கர்த்தா சம்மதத்துடன் அரசு மூலமாக பஞ்சாயத்து கட்டிடம் கட்டப்பட்டு இந்த கட்டிடம் கட்டக்கூடாது என்று மோகன் என்பவர் இந்த அறக்கட்டளை மூலமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதனால் பொதுமக்கள் அனைவருக்கும் பிரச்சனை செய்து வருகிறார். இந்த அறக்கட்டளை ரத்து செய்து இவர்மீது நடவடிக்கை எடுக்குமாறு ஊர் பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
- சிறப்பு செய்தியாளர் சுரேஷ்குமார்.

No comments:
Post a Comment