நெமிலி அருகே பள்ளி கட்டிடங்களை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறப்பு! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 26 September 2023

நெமிலி அருகே பள்ளி கட்டிடங்களை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறப்பு!


ராணிப்பேட்டை மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் இன்று குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் (2022-23) கீழ் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடங்களை காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 

அதனைத் தொடர்ந்து இராணிப்பேட்டை மாவட்டத்தில், வாலாஜா ஒன்றியம் வி.சி.மோட்டூர், நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளிக்கட்டிடத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்கள் குத்துவிளக்கேற்றி வைத்தார். மேலும் நெமிலி ஊராட்சி ஒன்றியம் மேலபுலம் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், ரூ. 30,34,000/-மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடத்தில், நெமிலி ஒன்றிய பெருந்தலைவர். பெ.வடிவேலு குத்துவிளக்கேற்றினார். 


இந்நிகழ்ச்சியில் நெமிலி ஒன்றிய துணைப் பெருந்தலைவர். ச.தீனதயாளன், ஊராட்சி மன்ற தலைவர்.அனிதா நாராயணன், ஒன்றியக் குழு உறுப்பினர். மனோகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள். பிரபாகரன், ரவி, பள்ளி தலைமை ஆசிரியர். விநாயகம், ஆசிரியை. ஞானம், ஒன்றிய பணி மேற்பார்வையாளர். பாண்டியன், ஊராட்சி செயலாளர். பார்த்திபன், விஜயன், ஹரிக்கிருஷ்ணன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா 

No comments:

Post a Comment

Post Top Ad