இராணிப்பேட்டை மாவட்டம் பருத்திப்புத்தூர் ஆதிதிராவிடர் காலனியில், பி. எம். ஏ. ஜி. ஒய் (2021-2022) திட்டத்தில் ரூ.15,00,000/-மதிப்பீட்டில் 30000 லிட்டர் கொள்ளளவு கொண்ட, மேநீர்தேக்கத் தொட்டி கட்டவும், சிறுணமல்லி ஊராட்சி, சம்பத்துராயன்பேட்டை கிராமத்தில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2022-2023ல் ரூ.9,00,000/- மதிப்பீட்டில், தானிய நெற்களம் ஆகிய பணிகளுக்கான பூமிபூஜை ஊராட்சி மன்ற தலைவர்கள் சரஸ்வதி கார்த்திகேயன், ஜோதி அருணாச்சலம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு கலந்து கொண்டு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதில், சுப்பிரமணி, பாண்டியன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள். தங்கராஜ், கோபி, மற்றும் பரத், சங்கர், குருநாதன், ரோஷன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:
Post a Comment