இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த அசநல்லிகுப்பம் கிராமத்தில் உள்ள முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் 92வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலை மற்றும் சயனபுரம் ஊராட்சி புது கண்டிகை கிராமத்தில் உள்ள அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி. பெருமாள் அவர்கள் கலந்து கொண்டு டாக்டர். ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் நெமிலி ஒன்றிய இளைஞர் அணி. ஆர்.எல்லப்பன், நெமிலி மத்திய ஒன்றிய சுற்று சூழல் அணி அமைப்பாளர். முரளி முக்கேஷ், நெமிலி மேற்கு ஒன்றிய சுற்று சூழல் அணி எஸ். ராஜராஜன், வழக்கறிஞர்கள். சுரேஷ், ராஜேஷ், இளைஞர் அணி. ஜி. வி. எஸ். சதீஷ், அசநெல்லிகுப்பம். சேக் முகமது, புது கண்டிகை கிளை செயலாளர். சலீம் மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:
Post a Comment