நெமிலி அருகே வேட்டாங்குளம் கிராமத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 2 October 2023

நெமிலி அருகே வேட்டாங்குளம் கிராமத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம்!


இராணிப்பேட்டை மாவட்டம்  நெமிலி அடுத்த வேட்டாங்குளம் கிராமத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர். சாந்தி ரவி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற துணை தலைவர். கவிதா சிவக்குமார் அவர்கள் வரவேற்பு அளித்தார். 

இக்கூட்டத்தில் தெருவிளக்கு, சிமெண்ட் சாலை, 100 நாள் வேலை,  கொசு மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் முன்னெச்சரிக்கையாக அனைவரும் குடிநீரை காய்ச்சி வடிகட்டி பருகவும், இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் போன்ற தீர்மானங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. இதில் பதிவுரு பற்றாளர். அ. சிவலிங்கம், கிராம நிர்வாக அலுவலர். நிரோஷா, ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள். பி. ஞானப்பிரகாசம், என். பொன்னுரங்கம், ஏ. மோகனா அருள், வி. ஸ்ரீ ராமுலு, டி. விஜயா துரை, ஊராட்சி செயலாளர் சௌமியா, மக்கள் நலப்பணியாளர். ஏகாம்பரம் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா. 

No comments:

Post a Comment

Post Top Ad