இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய பெருந்தலைவர், பெ.வடிவேலு அவர்கள் கலந்து கொண்டு கிராம சபையின் நோக்கம் குறித்தும், தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்தும் விளக்கிப் பேசினார். மேலும் கீழாந்துரை ஊராட்சியில் 1. ரூ.14 இலட்சம் மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி, 2.ரூ.33 இலட்சம் மதிப்பீட்டில் கீழாந்துரை கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி, 3. ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி 4. ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் தாட்கோ காலனி பகுதியில் கழிவுநீர் கால்வாய் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, 5. ரூ.1.88 கோடி மதிப்பீட்டில் கீழாந்துரை முதல் தேவதானம் வரை செல்லும் சாலை, மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாடு செய்யும் திட்டத்தின் கீழ் தார் சாலையாக மேம்பாடு செய்யும் பணி 6. ரூ.7.5 இலட்சம் மதிப்பீட்டில் கீழாந்துரை கிராமத்தில் பள்ளிக் கட்டிடங்கள் பழுதுபார்த்தல் பணி, 7. ரூ.17 இலட்சம்* மதிப்பீட்டில் கீழாந்துரை கிராமத்தில் 2 தானிய நெற்களம் அமைக்கும் பணி, 8. ரூ.8 இலட்சம் மதிப்பீட்டில் கீழாந்துரை கிராமத்தில் பள்ளிக் கழிவறை அமைக்கும் பணி, 9. ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில், கீழாந்துரை கிராமத்தில், உயர்கோபுர மின்விளக்கு அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் மொத்தம் ரூபாய் மூன்று கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருவதாக ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு அவர்கள் இக்கூட்டத்தில் தெரிவித்தார்.
இதில் நெமிலி ஒன்றிய துணைப் பெருந்தலைவர். ச.தீனதயாளன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள். பிரபாகரன், இரவி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், சுகாதார செவிலியர், ஆசிரியர்கள், கலைஞர்தாசன் உள்ளிட்ட கழகத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:
Post a Comment