நெமிலி அருகே வெளிதாங்கிபுரம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 2 October 2023

நெமிலி அருகே வெளிதாங்கிபுரம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம்!


இராணிப்பேட்டை மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர் காந்தி அவர்கள் வழிகாட்டுதலின்படி வெளிதாங்கிபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமையில், ஊராட்சி மன்ற துணை தலைவர். தணிகைவேல் அவர்கள் முன்னிலையில் நடைப்பெற்றது. 


இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், மாவட்ட திட்ட குழு உறுப்பினருமான. சுந்தரம்மாள் பெருமாள் அவர்கள் கலந்து கொண்டு மக்கள் குறைகளை கேட்டறிந்தார். இதில் நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர். எஸ்.ஜி.சி.பெருமாள், நெமிலி மத்திய ஒன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர். முரளி முக்கேஷ், ஊராட்சி செயலாளர். ரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கிராம சபை தீர்மானங்கள்; ஏரி கால்வாய் தூர்வாருதல், வெளிதாங்கிபுரம் ஊராட்சி மோட்டூர் பகுதிக்கு புதிய நியாய விலை கடை, சிமென்ட் சாலை அமைத்தல், புதிய பேருந்து நிலையம் அமைத்தல், புதிய இந்தியன் வங்கி கிளை ஏற்படுத்துதல், வரவு செலவுகள் பற்றி ஆண்டறிக்கை போன்ற தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad