பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் குப்பை கிடங்கு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம் உரிய நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி ஆணையர் உறுதி. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 2 October 2023

பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் குப்பை கிடங்கு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம் உரிய நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி ஆணையர் உறுதி.


இராணிப்பேட்டை, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடியவர் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் சீனிவாச ராவ் நினைவு தினத்தில் ஆற்காடு நகராட்சி 7ஆவது வார்டு முடிவில் உள்ள ஜெயராம் நகர் பகுதியில் அமைந்துள்ள குப்பை கிடங்கை அகற்ற கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாவட்டத் தலைவர் பி. ரகுபதி தலைமையில் குப்பை கிடங்கு அகற்றும் போராட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் பி. மோகன், சிஐடியு ஆட்டோ சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி. மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில இணை செயலாளர் ப. செல்வம், கட்சியின் ஆற்காடு தாலுகா செயலாளர் எஸ். செல்வம், கன்னியப்பன், சங்கத்தின் மாவட்ட செயலாளர் எபிஎம். சீனிவாசன், ஆற்காடு நகர காங்கிரஸ் தலைவர் எஸ். பியாரே ஜான், விவசாய தொழிலாளர் சங்கம் மாவட்ட தலைவர் டி. சந்திரன், விவசாய சங்க மாவட்ட தலைவர் எஸ். கிட்டு, பொருளாளர் சி. ராதாகிருஷ்ணன், வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மா. கோவலன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். உடன் அரசு போக்குவரத்து சங்கம் மண்டல செயலாளர் கே. ரவிச்சந்திரன், கட்டுமான சங்க மாவட்ட தலைவர் என். ரமேஷ், மலை சங்கம் குமார், ஆட்டோ சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாபு, பொருளாளர் கே. ரமேஷ், தென்னரசு உள்ளிட்டு பகுதி வாழ் மக்கள் பலர் கலந்து கொண்டனர்.


ஆற்காடு நகராட்சி ஜெயராம் நகர் பகுதியில் பூங்கா அமைப்பதற்கான ஒதுக்கப்பட்ட இடத்தில் குப்பை கிடங்கு செயல்படுத்தி வருகிறது நகராட்சி நிர்வாகம். 8ஆவது வார்டில் அமைந்துள்ள குப்பை கிடங்கு 10 வார்டு குப்பைகள் இங்கு சேகரிக்கப்படுகிறது. அங்கு கொட்டப்படும் கழிவுகளால் துர்நாற்றம் பரவி பகுதி மக்களுக்கு நோய்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மக்கள் பலமுறை புகார் மனு அளித்தும் எந்த பலனும் இல்லாத நிலையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம். குப்பை கிடங்கை நோக்கி பேரணியாக சென்று குப்பை கிடங்கில் இருந்த குப்பைகளை எடுத்துக்கொண்டு நகராட்சி அலுவலகம் கொண்டு சேர்க்க பேரணியாக சென்றனர். வழியில் காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி தடுத்து நிறுத்தி நகராட்சி ஆணையாளரிடம் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தார்.


ஆற்காடு நகராட்சி ஆணையாளர் கி.சு.கிருஷ்ணா ராம், பொறியாளர் எழிலரசனுடன் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி இறுதியாக ஆற்காடு நகராட்சி ஜெயம் நகர் பகுதியில் இயங்கி வரும் எம்சிசி நாற்றம் இல்லாமல் பராமரிக்கப்படும், தரம் பிரித்த குப்பைகள் இங்கு காட்டப்படமாட்டாது. எம்சிசி இங்கிருந்து அகற்றுவது சம்பந்தமாக அரசுக்கு கடிதம் அனுப்பி 3 மாதத்திற்குள் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆற்காடு நகராட்சி ஆணையாளர் எழுத்து வடிவில் உறுதியளித்துள்ளார்.


- சிறப்பு செய்தியாளர் சுரேஷ்குமார். 

No comments:

Post a Comment

Post Top Ad