வாலாஜா ஒன்றியம் வீசி மோட்டூர் கிராமத்தில் மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள்!!!. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 2 October 2023

வாலாஜா ஒன்றியம் வீசி மோட்டூர் கிராமத்தில் மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள்!!!.


தேசப்பிதா அண்ணன் மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள் விழா மற்றும் கல்வி கண் திறந்த கர்மவீரர் நாட்டு மக்களுக்காக வாழ்ந்த உத்தம தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு நாள் விழா வாலாஜா ஒன்றியம் வீசி மோட்டூர் கிராமத்தில் ஒன்றிய தலைவர் கே கணேசன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய நிர்வாகிகள் காங்கிரஸ் தொண்டர்கள் மாவட்ட துணைத் தலைவர் வாலாஜா சங்கர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலசெயலாளர் அக்ரஹாரம் கே பாஸ்கர் அவர்கள் கலந்துகொண்டு மகாத்மா காந்தி காமராஜர் பற்றி அவர்கள் மக்களுக்கு எவ்வாறு சேவை செய்தார்கள் இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தை எவ்வாறு நேசித்தார்கள் என்பதை கட்சித் தொண்டர்களுக்கு எடுத்துரைத்து நாமும் இந்த இயக்கத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நடைபயண நாயகன் ராகுல் காந்தி அவர்களை பிரதமர் ஆக்க இந்திய கூட்டணி வெற்றி பெற ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் உழைக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியை கிராம தோறும் பலப்படுத்த வேண்டும் என்றும் உரையாற்றினார் நிகழ்ச்சியில் ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.


- சிறப்பு செய்தியாளர் சுரேஷ்குமார்.

No comments:

Post a Comment

Post Top Ad