இம்மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராகவும், பத்து ரூபாய் இயக்கத்தின் பொதுச் செயலாளர் முனைவர்.நல்வினை விஸ்வராஜி எம்.எ,பி.எல் முன்னிலையில் மாநாட்டு பேருரையாற்றி விழாவை சிறப்பித்து பத்து ரூபாய் இயக்க நிர்வாகிகளுக்கும், பொறுப்பாளர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் ஆர்.டி.ஐ. சார்ந்த பயிற்சியளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் தமிழக ஒருங்கிணைப்பாளர் சுப.கார்த்திகேயன், மாநிலச் செயலாளர்கள் கே.சதீஷ்குமார், க.பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து விழாவில் முன்னிலை வகித்தனர். இதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட சட்ட ஆலோசகர் சி.சண்முகசுந்தரம், திமிரி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கே.பழனியப்பன் மதிய அறுசுவை உணவு ஏற்பாடடு செய்து சிறப்பித்தனர். யுவராஜ், பிச்சாண்டி, கமலக்கண்ணன், பரத், சுரேஷ், கிருஷ்ண மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் களஆய்வு அனுபவங்களை பகிர்ந்து சிறப்புரையாற்றி விழாவை சிறப்பித்தனர்.
இப்பயிற்சியில் ஆர்.டி.ஐ சமூக ஆர்வலரும், செய்தி உதவி ஆசிரியருமான டாக்டர். எம்.ராஜ்பாபு, கார்த்தி, சுனில்குமார், சமூக ஆர்வலரும், தினகுரல் செய்தியாளர்களுமான எஸ்.துரைராஜ், வாலாஜா சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு நல்வினை விஸ்வராஜ் மற்றும் தர்மேந்திரன் ஆகியோருக்கு ஆர்.டி.ஜ.சிறப்பு விளம்பர இதழ் வழங்கி பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர்.
மேலும் இம்மாநாட்டிற்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் செய்தியாளர்கள் என இருநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மாநாட்டு விழாவை சிறப்பித்தனர். சிறப்பு விருந்தினர்களாக மாநில துணை பொதுச் செயலாளர் சு.வீரபாண்டியன், மாநில செயலாளர் வழக்குரைஞர் திருவள்ளுர் பாஸ்கர், ராணிப்பேட்டை மாவட்ட துணைச் செயலாளர் க.வாசுதேவன், சுரேஷ்குமார், ஆற்காடு ஒன்றிய செயலாளர் ஆர்.சுதாகர், சென்னை மாவட்ட செயலாளர் கிருபாகரன், கஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் மு.காவல்துறை எஸ்.ஐ. சிவக்குமார், திருவள்ளூர் மாவட்ட செயலாளரும், வழக்குரைஞர் க.பழணி, கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் டேவிட்குமார் , விழுப்புரம் மாவட்ட செயலாளர் சின்ராஜ் மற்றும் பல பத்துரூபாய் இயக்கத்தினர் பல பொறுப்பாளர்கள், நிரவாகிகள், உறுப்பினர்கள் என திராளானோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாநாட் பொதுக்கூட்டத்தை சிறப்பித்தனர்.
இம்மாநாட்டின் முடிவில் அனைவருடன் உறுதிமொழி ஏற்க்கப்பட்டது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பல ஊழல்கள், அரசு நிலங்களை மீட்ட, பொதுநல சேவைகளை பாராட்டி, தகவல் போராளிகளுக்கு சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

No comments:
Post a Comment