இராணிபேட்டை அடுத்த மேல்விஷாரம் நகராட்சிக்குட்பட்ட ரஷித் பேட்டை 2வது தெருவில் உள்ள மின் கம்பம் நகராட்சி கட்டியுள்ள கழிவு நீர் கால்வாய்க்குள் உள்ளது, அதில் எப்போதும் கழிவு நீர் சென்று கொண்டு உள்ளதால் அந்த மின் கம்பம் சிதிலமடைந்து துரு பிடித்து கம்பிகள் வெளியே வந்து விட்டது.
அது கீழே விழுந்து மின்சாரம் தாக்கி உயிர் சேதம் போன்ற மிகப்பெரிய விபத்து ஏற்படும் முன்பு உடனடியாக போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து அந்த மின் கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும், மேலும் இதுபோன்ற ஆபத்தான நிலையில் பல இடங்களில் கம்பங்கள் உள்ளதையும் தாங்கள் ஆய்வு செய்து மாற்ற வேண்டும் என்று என்று அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார்.

No comments:
Post a Comment