சுகாதார மேற்பார்வையாளர் கந்தசாமி வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு அவர்கள் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, பேசியதாவது. வட்டார சுகாதார பேரவை கூட்டத்தில் நெமிலி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 47 கிராம ஊராட்சியில் உள்ள அனைத்து அடிப்படை தேவைகள் குறித்தும் தகவல் தெரிவிக்கலாம், கிராம அளவில் உள்ள குறைகளை ஊராட்சி தலைவர் தீர்த்து வைப்பார். அதைவிட பெரிய அளவிலான பிரச்சனையை ஒன்றிய அளவில் தீர்க்க வைக்கலாம். மாவட்ட நிர்வாகம் தீர்க்கக் கூடிய பிரச்சனைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் அவர்கள் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்.
வட்டார சுகாதார பேரவை கூட்டத்தில் முன் வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு மாவட்ட ஆட்சியர் முன்னுரிமை கொடுத்து பிரச்சினையை தீர்த்து வைப்பார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் தினமும் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து வருகிறார் . ஏற்கனவே நான் முதல்வன், புதுமைப்பெண், இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
மேலும் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தங்களது பகுதிகளில் தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்து தீர்மானமாக நிறைவேற்றினர். கூட்டத்தில் நெமிலி ஒன்றிய துணை பெருந்தலைவர். ச.தீனதயாளன், நெமிலி பேரூராட்சி மன்றத் தலைவர். ரேணுகாதேவி சரவணன், சுகாதார ஆய்வாளர்கள். பூஞ்செழியன், பெருமாள், தேவநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள். பிரபாகரன்,ரவி, மருத்துவர்கள், சுகாதார துறை அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம்
நெமிலி தாலுகா

No comments:
Post a Comment