ஆற்காடு தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாள் 3 கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு கடந்த சுதந்திர தின விழாவில் ஏ.பி. ஜே அறக்கட்டளை தலைவர் கோபியின் பல்வேறு சமூக பணிகளை பாராட்டி முதல்-அமைச்சரால் வழங்கப்பட்ட 2023 ஆண்டிற்கான முதல்-அமைச்சரால் மாநில இளைஞர் விருத்திற்கான ரூ.1 லட்சம் காசோலையை ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மற்றும் ஏழை மாணவர்கவர்களுக்கு கல்வி கல்வி ஊக்கத் தொகையாக வழங்கினார்.
நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட இந்து அறநிலையத்துறை தலைவர் லட்சுமணன், ஆற்காடு டவுன் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மாவட்ட வணிக சங்க தலைவர் சரவணன், ரோட்டரி மாவட்ட தலைவர் பரத்குமார், தொழிலதிபர் அக்பர் ஷரீப், நெடுசாலைத்துறை 5 தாசில்தார் காமாட்சி மற்றும் அறக்கட்டளை தலைவர் கோபி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

No comments:
Post a Comment