இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, சயனபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில், நாட்டு நலப் பணித்திட்ட நிறைவு விழா பள்ளியின் தலைமை ஆசிரியர். திருநாவுக்கரசு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு அவர்கள் கலந்து கொண்டு நாட்டு நலப்பணித் திட்டத்தின் நோக்கம் குறித்தும், திட்டத்தின் மூலம் மாணவர்கள் கல்வி கற்பதோடு மட்டுமல்லாமல், சமூக நலன் மீது அக்கறையுடன் செயல்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். மேலும் நாட்டு நல பணித்திட்ட முகாமில்:
- தூய்மை பணியில் பெண்களின் பங்கு,
- பெண்களின் சுகாதார வாழ்வு,
- சிகரத்தைத் தொடு,
- நல்லெண்ணங்களே நம்மை மேம்படுத்தும்,
- அன்றாட வாழ்வில் அறிவியலின் பங்கு,
- பெண் கல்வியின் அவசியம்,
- யோகாவும், பெண்களும்
ஆகிய தலைப்புகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, சமுதாயப் பணியாற்றிய மாணவ, மாணவிகளுக்கு நெமிலி ஒன்றிய பெருந்தலைவர். பெ. வடிவேலு அவர்கள் கேடயங்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், சயனபுரம் ஊராட்சி மன்றத் தலைவர். பவானி வடிவேலு, விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் ஆசிரியர். வேதையா, நாட்டு நலப் பணித்திட்ட ஆசிரியர்கள், பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் இதில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:
Post a Comment