இராணிப்பேட்டை நெமிலி அருகே கல்பனாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ஜெயக்குமார் என்ற ராஜன் (வயது 46). இவர் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ந் தேதி பள்ளிக்கு செல்ல பேருந்துக்காக காத்திருந்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோவின் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கு வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி கலைப்பொன்னி தீர்ப்பு வழங்கினார். சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி ஜெயக்குமாருக்கு 22 ஆண்டுகள் 3 மாதம் சிறை தண்டனையும், ரூ.15,500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து ஜெயக்குமாரை காவல் துறையினர் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

No comments:
Post a Comment