மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கிய டிஜஜி. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 13 October 2023

மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கிய டிஜஜி.


வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வேலூர் சரக மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் M.S முத்துசாமி இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இக்கலந்தாய்வுக் கூட்டத்தின் இறுதியில் சிறப்பாக பணிபுரிந்த இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையினர் பானாவரம் வட்ட  ஆய்வாளர் லட்சுமிபதி ,நெமிலி காவல் நிலைய  உதவி ஆய்வாளர் சிரஞ்சீவிலு, சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சஞ்சீவிராயன் , சிப்காட் காவல் நிலைய தலைமை காவலர் பரத்குமார்,  நெமிலி காவல் நிலைய முதல் நிலை காவலர் தனசேகர் மற்றும் வாலாஜா காவல் நிலைய முதல் நிலை காவலர் ஜாவித்கான் ஆகியோருக்கு வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்கள்.


- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

No comments:

Post a Comment

Post Top Ad