இராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் சார்பில் மேல்விஷாரம் A.M.I முஸ்லிம் நிதி உதவி நடுநிலை பள்ளியில் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
அசோசியேஷன் தலைவர் கே.முஹம்மத் அயூப் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பள்ளியின் தாளாளர் கே.முஹம்மத் அனீஸ் அவர்கள், மேல்விஷாரம் முஸ்லிம் கல்விச் சங்கத்தின் உறுப்பினர் ஜி.நஜீப் அஹ்மத் அவர்களும் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். பள்ளியின் தலைமையாசிரியர் அ.முஹம்மத் பஹிம் வரவேற்புரையாற்றினார். மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மேல்விஷாரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அப்போது பள்ளியின் தலைமையாசிரியர் நாகராணி அவர்களும் ஆசிரியர்களும் மற்றும் அசோசியேஷன் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment