இராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சி தூய்மை பாரத இயக்கம் நகர்புறம் சார்பில் மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன்க்கு கௌரவச் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேல்விஷாரம் நகரத்தில் மீண்டும் மஞ்சப்பை பொதுமக்கள் மத்தியில் மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் சுற்றுச்சூழலை சுத்தமாகவும், அழகாகவும் மாற்ற, தூய்மையான காற்று சுத்தமான நீர் மற்றும் ஆரோக்கியமான சூழலை உருவாக்கும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மேல்விஷாரம் நகரத்தில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது. அர்ப்பணிப்புடன் கூடிய சுயநலமற்ற தூய்மைப்பணியினை பாராட்டியும் மேல்விஷாரம் நகராட்சியினை தூய்மையான நகரமாக வைத்திருப்பதிலுள்ள முனைப்பினை பாராட்டியும் கௌரவச் சான்றிதழ் மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன்க்கு மதிப்பிற்குரிய மேலாளர் ஜி.மனோகரன் அவர்கள் கௌரவச் சான்றிதழை வழங்கி பாராட்டினார்.
இச்சான்றிதழை அசோசியேஷன் தலைவர் கே.முஹம்மத் அயூப் அவர்கள் பெற்றுக் கொண்டார். அப்போது கணக்கர் து.கருணாகரன் அவர்கள், துப்புரவு ஆய்வாளர் கு.ஜெயக்குமார் அவர்கள், தூய்மை பாரத இயக்க மேற்பார்வையாளர் எம்.பரமேஸ்வரி அவர்கள், பரப்புரையாளர்கள் சுஜாதா, அப்துல் ரஹ்மான், முஹம்மது ஆசிப், ராஜா ஆகியோர்கள் மற்றும் அசோசியேஷன் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment