ராணிபேட்டை மாவட்டம் ஆற்காடு தோப்புக்கான பகுதியில் உள்ள அருள்மிகு அன்ன பூரணி சமேத ஸ்ரீ கங்காதர ஈஸ்வரர் ஆலயத்தில் மஹா கந்தசஷ்டி விழா நடைபெற்றது.
கடந்த 13 ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது 6 ம் நாளன நேற்று (18/11/2023) ஆலயத்தில் சூரசம்ஹாரம் நடைபெற்றது இதில் முருகன் அசுரர்களை அழிக்கும் தத்ரூப காட்சிகளும் இடம் பெற்றிருந்தது இதில் நாடக நடிகர்கள் அசுரர் வேடம் அணிந்து நடித்தனர்.
விழாவில் சிறுவர்களின் பரதநாட்டியம், கலைநிகழ்ச்சிகளும், நடைபெற்றது பின்னர் முருகனுக்கு பால் அபிஷேகம் தீபாராதனைகளும் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கந்த கடவுளான முருகனை வணங்கி வழிப்பட்டனர் இவ்விழாவினை ஆலயத்தின் தலைவர் கு. சரவணன் தொடங்கி வைத்தார். இதில் ஆலய இளம் நெஞ்சங்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு முருகன் அருள் பெற்றனர்.
- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜேசுரேஷ்குமார்.

No comments:
Post a Comment