ராணிபேட்டை மாவட்டத்தின் சார்பில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 20 November 2023

ராணிபேட்டை மாவட்டத்தின் சார்பில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.


வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து, படித்த வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்கள் வேலைபெரும் நோக்கில் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 25.11.2023 சனிக்கிழமை அன்று காலை 08.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை ஆற்காடு கோ.வரதராசுலு செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் நடத்திட உள்ளது.


இம்முகாமில் TVS GROUPS, INDOO COOL, MRF, IFB INDUSTRIES, GANESH CARS, L&T FINANCE, COROMANDAL, IZEON INNOVATIVE, MI LIFESTYLE, S10 HEALTHCARE SOLUTIONS, LUCAS TVS, HITACHI, CARBORUNDUM UNIVERSAL, MOTHERSON, BELSTAR MICRO FINANCE, ASAHI INDIA GLASS LTD. 5K CAR CARE PVT LTD, BRAKES INDIA PRIVATE LTD, AXIS BANK LIMITED, FLIPKART, APOLLO HEALTH CARE, KAUVERY HOSPITAL மற்றும் OVERSEAS MAN POWER CORPORATION LTD., (தமிழ்நாடு அரசு நிறுவனம்) போன்ற 100-க்கும் மேற்பட்ட தனியார்துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8000-த்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்பிட தங்களுக்கு தேவையான தகுதியான நபர்களை தேர்வு செய்து, பணி நியமனம் செய்ய உள்ளனர்.


இவ்வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் SSLC, HSC, ITI, DIPLOMA, Any Degree, Nursing, BE., MBA உள்ளிட்ட கல்வித் தகுதிகளை உடைய வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு, தங்களுக்கு தேவையான வேலையினை தங்கள் அளவிலேயே தேர்வு செய்து பயன்பெறலாம்.


விருப்பமும், தகுதியும் உள்ள வேலைநாடுநர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், தற்குறிப்பு (Resume) மற்றும் அனைத்து கல்விச் சான்றுகளுடன் முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி, இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துளார்.


- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

No comments:

Post a Comment

Post Top Ad