அந்த மண்ணின் மைந்தர்களுக்கு தான் அந்த மண் சொந்தம் அதற்காகத்தான் தற்பொழுது பாலஸ்தீனத்தினர் போராட்டம் செய்து வருகின்றனர். இஸ்ரேல் தொடர்ந்து மருத்துவமனைகளை தாக்குகின்றது பெண்களை குறி வைத்து தாக்குகின்றார்கள்.
இந்தியாவின் தந்தை மகாத்மா காந்தி முதல் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வரை நாம் பாலஸ்தீனத்தை தான் ஆதரித்து வந்தோம். இஸ்ரேலை ஆதரித்த இந்தியா தற்பொழுது மீண்டும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது இது வரவேற்கத்தக்க விஷயம். அதிமுக எடப்பாடி பழனிசாமியின் கடந்த நான்கு ஆண்டு ஆட்சி பாஜகவுடன் ஆதரவு இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை அதிமுகவினர் நிர்பந்தத்திலேயே பாஜகவுடன் கூட்டணி வைத்தனர். பாஜகவுடன் எடப்பாடி பழனிசாமி ஒரு சுமுகமான நிலையில் இருந்ததால்தான் அண்ணா திமுகவை தன் பக்கம் கொண்டு வர முடிந்தது.
தமிழ்நாடு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் பாஜகவுடன் கூட்டணியை முறித்து தற்போது வெளியே வந்துள்ள அதிமுகவுக்கு எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தை இரு நாடுகளாக அறிவிக்க வேண்டும் என்று ஐநாவிடம் கோரிக்கை வைத்துள்ளது.
யுத்தம் என்பது போர் வீரர்களுக்குள்ள நடக்க வேண்டும் பொதுமக்கள் மத்தியில் நடக்கக்கூடாது. ஐநா சபை உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு இஸ்ரேல் பிரதமரை போர் குற்றவாளியாக அறிவித்து உலக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்று உலக நாடுகள் சொல்ல ஆரம்பித்திருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள செயல்படாத கல்குவாரிகளை அரசாங்கம் தானாக முன்வந்து கணக்கெடுத்து பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் செல்லாதவாறு வேலி அமைத்து தர வேண்டும். காவல்துறையினர் உதவியுடன் கஞ்சா பொருட்கள் சில்லறை விநியோகத்தில் வினியோகிக்கப்படுகிறது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இன்னும் சொல்லப் போனால் பள்ளி மாணவர்கள் மத்தியிலேயே இந்த கஞ்சா பழக்கத்தை கஞ்சா வியாபாரிகள் ஏற்படுத்தி உள்ளனர்.
2024 வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள அணிகள் எல்லாம் எப்படி சேருகிறதோ என்பதை பார்த்து தான் எங்களுடைய நிலைப்பாடு அறிவிக்கப்படும்.

No comments:
Post a Comment