தீபாவளி பண்டிகை கால பாதுகாப்பில் நகரின் முக்கிய இடங்களில் காவல் கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பு. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 7 November 2023

தீபாவளி பண்டிகை கால பாதுகாப்பில் நகரின் முக்கிய இடங்களில் காவல் கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பு.


இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொருட்களை வாங்க பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஆற்காடு பேருந்து நிலையம் வந்து செல்கின்றனர்.


பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் குற்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி ஐ பி எஸ் அவர்களின் உத்தரவின் பேரில் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி கிரண்சுருதி ஐபிஎஸ் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரய்யா ராணிப்பேட்டை உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் பிரபு அவர்களின் மேற்பார்வையில் ஆற்காடு நகர காவல் வட்ட ஆய்வாளர் விநாயகமூர்த்தி அவர்களின் தலைமையில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து சுழற்சி காவலர்களை நியமித்து குற்ற சம்பவங்கள் நடவாமல் இருக்க தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

No comments:

Post a Comment

Post Top Ad