நெமிலி பிடிஓ அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு துறை மூலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு கூட்டம்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 7 November 2023

நெமிலி பிடிஓ அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு துறை மூலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு கூட்டம்!


இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பிடிஓ அலுவலகத்தில்  சமூக பாதுகாப்பு துறை மூலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு கூட்டம் நெமிலி ஒன்றிய பெருந்தலைவர். பெ. வடிவேலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நெமிலி ஒன்றிய துணை பெருந்தலைவர். தீனதயாளன், பிடிஓ-க்கள் பிரபாகரன்,ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதில் சமூக பாதுகாப்பு துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பணியாளர் பார்த்திபன் கலந்து கொண்டு பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, குழந்தைகள் திருமணம் தடை சட்டம் போக்சோ சட்டம், குழந்தைகளின் உரிமைகள், காவலன் செயலி, குழந்தைகளுக்குகான அவசர உதவி எண்:1098 உங்களுக்கான அவசர உதவி எண்:181. ஆகியவைகுறித்தும் குழந்தைகளின் பாதுகாப்பு, குழந்தை திருமணம், குழந்தைகள் கடத்தல், குழந்தைகளை துன்புறுத்துதல், குழந்தை தொழிலாளர்கள் முறை, பள்ளிக்கு செல்லா குழந்தைகள் மற்றும் பராமரிப்பு முக்கியத்துவம் குறித்தும் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே எப்படிப்பட்ட உறவுமுறை இருக்க வேண்டும் தொடர்ந்து நடந்த கூட்டத்தில் கிராம அளவிலான குழந்தைகளை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம் 3 மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இதில் வட்டார ஒருங்கினைப்பாளர்கள் கோமதி, சுகந்தி, ஒருங்கினைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தேன்மொழி, வருவாய் ஆய்வாளர் சுரேஷ், உதவி காவல் ஆய்வாளர் நெமிலி சப் இன்ஸ்பெக்டர் ஜெயராஜ், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா. 

No comments:

Post a Comment

Post Top Ad