அதில் மருத்துவமனைக்கு 80 கிலோ வாட் மின்சாரம் மட்டும் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்திருந்தனர், இதனால் மருத்துவமனைக்கு மின் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்தது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அறுவை சிகிச்சை நடைபெறும் நேரங்களில் அவ்வப்போது மின் தட்டுப்பாடு ஏற்பட்டது மருத்துவர்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
மருத்துவமனையின் நிலைமையை அறிந்த அனந்தலை ஊராட்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் எஸ்.அலிம் அஹமத் சுமார் 30 மாதங்களாக துறை சார்ந்த அதிகாரிகளோடு போராடியதின் விளைவாக 9.3 லட்சம் செலவில் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனைக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் 250 கிலோ வாட் தனி ட்ரான்ஸ்பாரம் அமைக்கப்பட்டது.
தற்போது மருத்துவமனைக்கு பயன்பாட்டிற்கு வந்துள்ளது சமூக ஆர்வலர் அலிம் அஹமதின் சிரிய முயற்சியை பாராட்டி பிஜேபி, பாமக போன்ற கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி பாராட்டினர் அதனைத் தொடர்ந்து சமூக ஆர்வலர் அஹமத் பேசுகையில் ஈ.பி டிரான்ஸ்பார்ம் மருத்துவமனைக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு முன் துறை சார்ந்த அதிகாரிகள் முறையாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்து துவக்கி வைத்திருக்க வேண்டும்.
ஆனால் யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக. டிரான்ஸ்பார்மிலிருந்து மருத்துவமனைக்கு மின் இணைப்பை இணைத்துள்ளனர் இந்த நிகழ்வு உண்மையாக வருத்தம் அளிக்கிறது என்றார்.

No comments:
Post a Comment