ராணிப்பேட்டையில் SDPI கட்சியின் அரசியல் பயிலரங்கம் நடைபெற்றது, இதில் ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் A.கெளவுஸ் அவர்கள் தலைமை தாங்கினார், மாவட்ட பொது செயலாளர் இமாம் அப்துல் கபூர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் M.தமீம் பாஷா அவர்கள் தொகுப்புரையில் சிறப்பு அழைப்பாளர் வேலூர் மண்டல தலைவர் Y.பயாஸ் அஹமத் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
ராணிப்பேட்டை மாவட்ட வர்த்தக அணி பொறுப்பாளர் கெளசியா ஓட்டல் ரஹீம் பாய், இந்நிகழ்வில் பனப்பாக்கம், கல்மேல் குப்பம், ராணிப்பேட்டை, ஆற்காடு, மேல் விஷாரம் நகர நிர்வாகிகள் கிளை மற்றும் செயல்வீரர்கள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஹம்மது ரபி நன்றியுரை வழங்கினார்.
- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

No comments:
Post a Comment