ராணிப்பேட்டை மாவட்டத்தில் திருட்டு தொடர்பான புகார்களில் 87சதவீதம் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த மாவட்ட காவல்துறை பாராட்டிய டிஜஜி. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 27 December 2023

ராணிப்பேட்டை மாவட்டத்தில் திருட்டு தொடர்பான புகார்களில் 87சதவீதம் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த மாவட்ட காவல்துறை பாராட்டிய டிஜஜி.


திருடுபோன 125 பவுன் தங்கநகைகள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறைக்கு DIG பாராட்டு ராணிப்பேட்டை காவல் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மாவட்டத்திலுள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பதிவான குற்ற வழக்குகளில் வாகன திருட்டு சம்பந்தமாக பதிவான 70 வழக்குகளில், 70 வழக்குகளும் கண்டறியப்பட்டு 68 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளது. 


அதேபோல் தங்கநகைகள் களவுபோனது சம்பந்தமாக பதிவான 34 வழக்குகளில் 28 வழக்குகள் கண்டறியப்பட்டு, சுமார் 125 சவரன் தங்கநகைகள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் பணம் திருடு போனது சம்பந்தமாக பதிவு செய்யப்பட்ட 7 வழக்குகளில், 7 வழக்குகளும் கண்டறியப்பட்டு ரூ. 19,06,500/- பணம் மீட்கப்பட்டுள்ளது. 

செல்போன் திருட்டு சம்பந்தமாக பதிவான 13 வழக்குகளில், 13 வழக்குகளும் கண்டறியப்பட்டு 13 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது . திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதோடு, அதில் 12 நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர சண்டை வழக்குகளில் 11 நபர்கள் மீதும், பாலியல் வழக்குகளில் 03 நபர்கள் மீதும், கள்ளச்சாராய வழக்குகளில் 03 நபர்கள் மீதும், போதைப்பொருள் விற்பனை வழக்குகளில் 36 நபர்கள் மீதும் என மொத்தம் 65 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


மேற்படி திருட்டு சம்பவங்கள் தவிர்த்து, கடந்த 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் தொலைந்துபோன சுமார் ரூ.19,53,300/- மதிப்புள்ள 116 செல்போன்கள் கண்டறியப்பட்டு அவை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் கடந்த 01.01.2023 முதல் இன்று (27.12.2023) வரை 152 குற்ற வழக்குகளில் காணாமல்போன பொருட்களின் மதிப்பு ரூ.13881190/-, அதில் 144 குற்ற வழக்குகளில் ரூ.11750520/- பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.

No comments:

Post a Comment

Post Top Ad