ஆற்காடு நகர காவல் நிலையத்தில் வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஆய்வு. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 2 December 2023

ஆற்காடு நகர காவல் நிலையத்தில் வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஆய்வு.


வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் . M.S . முத்துசாமி இ.கா.ப., அவர்கள் இன்று ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை உட்கோட்டம், ஆற்காடு நகர காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆற்காடு நகர வட்ட அலுவலகத்திலுள்ள அனைத்து பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். 

பின்னர் மனுக்கள் மீதான விசாரணை மற்றும் நிலுவையிலுள்ள மணுக்கள் பற்றி கேட்டறிந்தும், நிலுவையிலுள்ள மனுக்களை உடனடியாக விசாரணை மேற்கொண்டு தீர்வு காணவும் உத்தரவிட்டார். வழக்கு கோப்புகளை பார்வையிட்டு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பதிவான வழக்குகளில் விரைந்து புலன் விசாரணை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து வழக்கை நீதிமன்றத்தில் உரிய நேரத்தில் நடத்தி குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தருமாறும் அறிவுறுத்தினார். 


மேலும், காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடம் பொதுமக்களிடையே நற்பெயர் பெறும் வகையில் அன்பான அணுகுமுறையுடன் பணிசெய்ய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். ராணிப்பேட்டை உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு அவர்கள், ஆற்காடு நகர வட்ட ஆய்வாளர் விநாயகமூர்த்தி, உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.


- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.. 

No comments:

Post a Comment

Post Top Ad