மண் வீடு தொடர் மழையின் காரணமாக ஒரு பகுதி இடிந்து விழுந்து விட்டதை நேரடியாக பார்வையிட்ட அமைச்சர் காந்தி. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 3 December 2023

மண் வீடு தொடர் மழையின் காரணமாக ஒரு பகுதி இடிந்து விழுந்து விட்டதை நேரடியாக பார்வையிட்ட அமைச்சர் காந்தி.


இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகராட்சி சவுராஷ்டிரா வீதி ஒத்தவாடை தெரு தெருவில் வசிக்கும் திருமதி  வச்சலா ராதாகிருஷ்ணன் வயது 65 அவர்களுடைய ஓட்டு மண் வீடு தொடர் மழையின் காரணமாக  ஒரு பகுதி இடிந்து விழுந்து விட்டதை நேரடியாக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர்  ஆர் காந்தி அவர்கள் பார்வையிட்டு மூதாட்டியை அருகில் ஒரு வாடகை வீட்டில் குடியமர்த்த கேட்டுக் கொண்டு பணம் ரூபாய் ஐந்தாயிரத்தை வழங்கினார்கள். 


மேலும் இவருக்கு நிவாரண உதவிகள் வழங்கிடவும் வீடு கட்டுவதற்கு தேவையான நடவடிக்கை அரசின் மூலம் உதவிகள் பெற்றுத் தரவும் கேட்டுக் கொண்டார்கள். உடன் வட்டாட்சியர் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், கவுன்சிலர்கள் ரமேஷ் இர்ஃபான் வினோத் பலர் உள்ளனர்.


- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

No comments:

Post a Comment

Post Top Ad