தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் மாநில சட்டசபைகளுக்கு நவம்பர் 7-ந் தேதி முதல் நவம்பர் 30-ந் தேதி வரை பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.
சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக அமோக முன்னிலையில் உள்ளது, தெலுங்கானாவில் காங்கிரஸ் முன்னணியில் உள்ளது, பாஜக வெற்றியை நோக்கி முன்னிலையில் உள்ளதால் மாவட்ட பாஜகவினர் வாலாஜா நகராட்சி அலுவலகத்தின் முன்பு சாலையில் வெடி வெடித்து கொண்டாடி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

No comments:
Post a Comment