ராணிப்பேட்டை மாவட்ட முத்துக்கடை பேருந்து நிலையத்தில் இன்று துணை ஜனாதிபதி, மற்றும் மக்களவை சபாநாயகர் ஆகியோரை அவமதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை பாஜக மாவட்ட தலைவர் விஜயின்ஜி, தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், உழைப்பாளராக பாராளுமன்ற பொறுப்பாளர் ரவிச்சந்திரன், ராணிப்பேட்டை நகர தலைவர் சிகாமணி, சமூக ஊடக மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாவட்ட துணைத் தலைவர் ஆர் ஜே சுரேஷ்குமார், மற்றும் மகளிர் நிர்வாகிகள் மாநில மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபநாயகருக்கு உரிய மரியாதை அளிக்காமல் அவமதிக்கும் வகையில் நடந்து கொள்வதாக குற்றஞ்சாட்டிய பாஜகவினர், தங்களை எதிர்ப்புகளை வெளிப்படுத்தும் விதமாக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

No comments:
Post a Comment