வேலூர் சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர் M.S.முத்துசாமி, இ.கா.ப., அவர்கள் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் காவல் நிர்வாக அலுவலகம் (நிர்வாகம்), நிர்வாக அலுவலகம் (கணக்கு), நிர்வாக அலுவலகம் (பொது), நிர்வாகப்பிரிவு, முகாம் அலுவலகம் என அனைத்து பிரிவுகளிலும் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். மாவட்டம் புதியதாக பிரிக்கப்பட்டதால் மேலும் புதிய பதிவேடுகளை பராமரிக்க அறிவுரைகளை வழங்கினார் மற்றும் பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதனை தெரிவித்தார்.
மேலும் மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத்தை (Special Branch) ஆய்வு செய்த காவல்துறை துணைத்தலைவர் அவர்கள் அனைத்து பதிவேடுகளையும் ஆய்வு செய்து மாவட்ட தனிப்பிரிவு காவலர்கள் எவ்வாறு திறமையாகவும் துரிதமாகவும் செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V.கிரண் ஸ்ருதி, இ.கா.ப., அவர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) வெ.விசுவேசுவரய்யா, தனிப்பிரிவு ஆய்வாளர் அருண்குமார் நிர்வாக அலுவலகர்கள் நாகராஜன், பாரதி மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்..

No comments:
Post a Comment