நெமிலியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் அமைச்சர் ஆர். காந்தி பங்கேற்பு! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 23 December 2023

நெமிலியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் அமைச்சர் ஆர். காந்தி பங்கேற்பு!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் உள்ள கே.பி.ஜி திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது. நெமிலி பேரூராட்சி தலைவர். ரேணுகாதேவி சரவணன் தலைமை தாங்கினார் டி. ஆர்.ஒ. சுரேஷ், செயல் அலுவலர். பூவேந்திரன் முன்னிலை வகித்தார் நெமிலி தாசில்தார். பாலச்சந்தர் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டு நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.



முகாமில் பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் தனித்தனியாக 335 கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடமிருந்துபெற்றனர். இதில் நெமிலி ஒன்றிய பெருந்தலைவர். பெ. வடிவேலு, மாவட்ட கவுன்சிலர். சுந்தராம்பாள் பெருமாள், ஒன்றிய செயலாளர். எஸ். ஜி. சி. பெருமாள், ஆர். பி. ரவீந்திரன், நகர செயலாளர். நெமிலி ஜனார்த்தனன், பனப்பாக்கம் சீனிவாசன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர். வெங்கடேசன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர். சரவணகுமார் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா 

No comments:

Post a Comment

Post Top Ad