பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் என்பது அசாதாரண சூழ்நிலைகளால் விவசாயிகளுக்கு பயிர் இழப்பு மற்றும் பயிர் பாதிப்பு ஏற்படும் போது நிதி உதவி வழங்குதல் மற்றும் தொடர்ந்து விவசாயம் செய்வதன் மூலம் நிலையான வருமானத்தைப் பெற விவசாயிகளுக்கு வழிவகை செய்யவேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா வட்டாரத்தில் வாலாஜா பிர்க்காவிற்கு உட்பட்ட கிராமங்களில் வாழை, சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம் என வாலாஜா வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அதற்கான வழிமுறைகளையும் விளக்கி உள்ளார்.
வாழை சாகுபடி செய்யும் போது ஏற்படும் இடர்பாடுகளான மழை பொய்த்தல், வெள்ளம், கடும் வறட்சி, தொடர் வறண்ட நிலவரம், புயல் மற்றும வெள்ளப்பெருக்கு ஆகியவற்றால் இழப்பு ஏற்படும்போது காப்பீடு செய்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடன் பெறும் மற்றும் கடன் விவசாயிகளுக்கு ஒரே வகையான காலக்கெடு வழங்கப்படுகிறது. வாழை பெறா விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.2873/- பிரீமியமாக செலுத்தி ரூ.57450/- வரை இழப்பீடாக பெறலாம்.

கடன் பெறும் விவசாயிகளுக்கு பிரீமியம் தொகையை அந்தந்த கடன் வழங்கும் வங்கிகள் மூலம் விருப்பத்தின்பேரில் பிடித்தம் செய்து காப்பீடு நிறுவனங்களுக்கு செலுத்தலாம். கடன் பெறாத விவசாயிகள் தங்களது அருகாமையிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொதுசேவை மையங்கள் மூலம் ஆன்லைன் மூலமாக பிரீமியம் செலுத்தலாம்.
இதற்கு சிட்டா மற்றும் அடங்கல், வங்கி புத்தக நகல், ஆதார் அட்டை, புகைப்படம் போன்றவை தேவையான ஆவணங்களாகும். ராபி பருவத்தில் அக்டோபர் முதல் நடவு செய்யும் வாழை பயிர்கள் இத்திட்டத்தில் பதிவு செய்திட தகுதி பெரும். வாழை பயிருக்கு காப்பீடு செய்ய அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் 29-ந் தேதி கடைசி நாளாகும். மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை அனுகி பயிர் காப்பீடு குறித்த விவரம் பெற்று பயன்பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

No comments:
Post a Comment