இந்த ஆண்டு மே மாதம் முதல் காவல் ஆய்வாளராக திரு சாலமன் ராஜா அவர்கள் பொறுப்பேற்றதில் இருந்து இன்று வரை சட்டம் & ஒழுங்கு குற்றத்தடுப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் பல குறிப்பிடத்தக்க சிறப்பான நடவடிக்கைகளான திருட்டு குற்றங்கள் எதிராக செயல்பட்டு இதுவரை 42 சவரன் தங்க நகைகள் அதன் மதிப்பு ரூ.10 லட்சம் மேலும் ஒரு முதியவயிடம் வங்கியில் திருடிய பணம் ரூ 5 லட்சம் மற்றும் திருடுபோன10 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து உரியவரிடம் ஒப்படைக்கபட்டது.மேலும் இயந்திர பொருட்கள், மற்றும் இதர பொருட்கள் உடன் சேர்த்து மொத்தம் சுமார் 35 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கண்டுபிடித்து உரியவர்ளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் வாலாஜாபேட்டை காவல் அதிகாரிகள் தலைமையில் இந்த ஆண்டு வாலாஜா நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைப்பெற்ற சிறப்பு நிகழ்வுகளான படவேட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா, கச்சாளன் நாயக்கர் தெரு திருவிழா, வாலாஜா நகர தேர் திருவிழா, பூக்கார தெரு திருவிழா பெருமாள் கோயில் கும்பாபிஷேகம், விநாயகர் சதுர்த்தி போன்ற திருவிழா காலங்களில், சிறப்பாக செயல்பட்டு எவ்வித சட்டம் & ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு பணி புரிந்துள்ளார்கள். மேலும் வாலாஜாபேட்டை பகுதியில் நடைப்பெற்ற மாவட்ட அளவிலான மாரத்தான், கிரிக்கெட் போன்ற பல விளையாட்டுகளுக்கு நல்ல முறையில் பாகாப்பு அளித்தும், நடந்து முடிந்த இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வினை அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எவ்வித ஒழுங்கீன செயல்கள் நடைபெறா வண்ணம் நடத்தியுள்ளார்கள், மற்றும் வாலாஜா காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்த பழைய காய வழக்குகளில் விரைவாக புலன்விசாரனை மேற்கொண்டு நீதிமன்ற விசாரணை க்காக அனுப்பியுள்ளர்கள்.
மேலும் வாலாஜா நகரத்தில் பேருந்து நிலையம் கட்டுமான பணி நடந்து வரும் நிலையிலும் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம் போக்குவரத்து ஒழுங்கு பணியை சிறப்பாக மேற்கொண்டுள்ளார்கள். வாலாஜா மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் எவ்வித குற்ற நிகழ்வும் நடைபெறா வண்ணம் இரவு, மற்றும் பகல் நேர ரோந்து காவலர்கள், குற்றப்பிரிவு காவலர்களை நியமித்து குற்றங்களை தடுத்து வருகிறார்கள். இதுபோன்று சிறப்பான பணிகளை கையாண்டு மக்களுக்கு பாதுகாப்பு அளித்து வரும் வாலாஜாபேட்டை காவல் துறை யினர்க்கு அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் பாராட்டு மற்றும் நன்றிகள் தெரிவித்துள்ளார்கள்.
- சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார்.
No comments:
Post a Comment