ராணிப்பேட்டை மாவட்டத்தில் நான்கு இடங்களில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமினை அமைச்சர் ஆர் காந்தி துவக்கி வைத்தார். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 22 December 2023

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நான்கு இடங்களில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமினை அமைச்சர் ஆர் காந்தி துவக்கி வைத்தார்.


பொதுமக்களுக்கு தமிழக அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் பொதுமக்களுக்கு சென்று சேரும் வகையில் தமிழக முதலமைச்சர் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன் அடிப்படையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நகராட்சி உட்பட்ட ராணிப்பேட்டை, சோளிங்கர், நெமிலி, மேல்விஷாரம் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி நான்கு இடங்களில் நடைபெற்ற முகாமினை அமைச்சர் ஆர் காந்தி துவக்கி த்து முகாமில் உடனடியாக தீர்வு கண்ட பயனாளிகளுக்கு சான்றிதழையினை வழங்கினார்.


இந்த முகாமில் மருத்துவம், சமூக நலத் துறை, காவல் துறை, நகராட்சி, உள்ளிட்ட அனைத்து துறைகளில் பொதுமக்கள் தங்களது மனுவினை கொடுத்து தீர்வு கண்டுப் பயனடைந்தனர்.


- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

No comments:

Post a Comment

Post Top Ad