மேல்விஷாரம் சாதிக் பாஷா நகரில் மாற்று இடம் ஒதுக்காமலேயே வீடுகளை இடித்த மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து அதிமுகவினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டி அனுமதி மனு. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 22 December 2023

மேல்விஷாரம் சாதிக் பாஷா நகரில் மாற்று இடம் ஒதுக்காமலேயே வீடுகளை இடித்த மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து அதிமுகவினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டி அனுமதி மனு.


ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகராட்சிக்குட்பட்ட சாதிக் பாஷா நகர் மற்றும் எம்ஜிஆர் நகர் கருணாநிதி நகர் ஆகிய பகுதியில் நீதிமன்ற உத்தரவினை காரணம் காட்டி மாற்று இடம் ஒதுக்காமலேயே மாவட்ட நிர்வாகம் சுமார் 528 வீடுகளை இடித்துள்ளனர் இதுதொடர்பாக அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்களுக்கு மாற்று இடம் ஒதுக்கி வீடுகளை கட்டித்தர வேண்டும் என  வலியுறுத்தி அறிக்கை  வெளியிட்டிருந்தார்..

ஆனால் இதுவரை மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காத காரணத்தால் வருகின்ற 28-ஆம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பாக அதிமுக மேற்கு மாவட்ட கழக சார்பில் "மக்கள் திரள்" கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதால் இன்று மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் தலைமையில் 500-க்கும் மேற்ப்பட்ட அதிமுகவினர்  காவல்துறை அதிகாரிகளை சந்தித்து ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் தெரிவித்து அனுமதி மனுவினை வழங்கினார்கள்.


- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

No comments:

Post a Comment

Post Top Ad