சோளிங்கரில் மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்க விழா கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர். காந்தி துவக்கி வைத்தார் - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 22 December 2023

சோளிங்கரில் மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்க விழா கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர். காந்தி துவக்கி வைத்தார்


ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்க விழா கைத்தறி மற்றும் துணிநூல்துறை  அமைச்சர் ஆர். காந்தி துவக்கி வைத்தார், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் இன்று நடைபெற்றது.

பொதுமக்கள் தங்களுக்கு தேவையான குறைகளை  மனுவாக  வழங்க மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் கொடுக்கும் மனுக்கள் மீது 30 நாளுக்குள் தீர்வுக்கான பாட வேண்டும் என்று தமிழக முதல்வர் ஆணை பிறப்பித்தார். இதையடுத்து, மக்களுடன் முதல்வர் திட்டத்தினை கைத்தறி துணி நூல் அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து திட்டத்தினை துவக்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

இந்தத் திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள நகராட்சி துறை ஊராட்சித் துறை வருவாய்த்துறை மருத்துவ துறை உள்ளிட்ட 29 துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு மக்களிடம் மனுக்களை பெற்றனர். இந்த நிகழ்ச்சியில், சோளிங்கர் வட்டாட்சியர் ஆனந்தன், நகராட்சி ஆணையர் கன்னியப்பன், உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

No comments:

Post a Comment

Post Top Ad