
ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே கன்னிகாபுரம் பகுதியில் சர்வே எண் 148-ல் 50 ஆண்டுகளாக 105 வீடுகள் கட்டி வசித்து வரும் குடும்பத்தினர் அரசு துறைகளிடம் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என பல மனுக்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் பட்டா வழங்குவதற்கான இடம் அளவீடு செய்யும் பணி நடைபெற்றதாகவும் அத்துடன் பணிகள் கிடப்பில் போடப்பட்டதாகவும் இதனை குறித்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் கேட்க சென்றால் பட்டா வழங்குவதற்கான வழங்கப்பட்ட மனுக்கள் மற்றும் கோப்பு ஆவணங்கள் காணவில்லை என அலட்சியமாக பதில் அளிப்பதகவும் இதனை கண்டிப்பதாகவும் மேலும் வருகின்ற கலைஞர் நூற்றாண்டு விழாவின் போது 105 குடும்பத்தினருக்கும் சிறப்பு முகாம் அமைத்து வீட்டுமனை பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கன்னிகாபுரம் பகுதியில் வீட்டுமனை பட்டா வேண்டி 50 ஆண்டுகளாக காத்திருக்கும் 105 குடும்பத்தினர் ஒன்றிணைந்து கைகளில் தட்டை ஏந்தி மடிப்பிச்சை கேட்டு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்
இதனை தொடர்ந்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை மனுவினை வழங்கி உள்ளனர்.
- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

No comments:
Post a Comment