தேசிய சிறுபான்மையினர் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி.இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 18 December 2023

தேசிய சிறுபான்மையினர் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி.இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் தேசிய சிறுபான்மையினர் தின விழா ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் 14 கிறித்துவ மகளிருக்கு சிறு தொழில் செய்ய நிதி உதவி தலா ரூ.10,000/- (ரூபாய் பத்தாயிரம்) விதம் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி, இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது. மத்திய மாநில அரசுகள் சிறுபான்மையின மக்களின் வாழ்க்கை பொருளாதார மேம்பாட்டிற்கும் தொடர்ந்து பல்வேறு நல திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. சிறுபான்மையின மக்களுக்கு கல்வி உதவித் தொகைகள் சிறுபான்மையின மக்கள் சுயதொழில் செய்திட வங்கியில் அரசின் மானியத்துடன் கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது மேலும் சிறுபான்மையின மக்களுக்கு அவர்களின் வழிப்பட்டு தலங்களை மேம்படுத்திடவும் அரசின் மூலம் நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல முஸ்லிம் கிறித்துவ மகளிர் சங்கங்கள் மூலம் நன்கொடை மற்றும் அரசின் இணை மானியத்துடன் இணைந்து ஏழை எளிய மகளிர் வாழ்க்கை மேம்பாட்டிற்காக நிதி உதவி வழங்கப்படுகிறது. இது போன்ற எண்ணற்ற நலத்திட்டங்கள் சிறுபான்மையினருக்காக அரசின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.


சிறுபான்மையின மக்கள் தங்களுடைய பிள்ளைகளை நன்றாக கல்வி பயில உறுதி ஏற்க வேண்டும் அரசு கல்விக்காக உதவிகளை வழங்கி வருகிறது. பெண் பிள்ளைகளை மேற்படிப்பு வரை படிக்க அனைவரும் உறுதி எடுத்து பெண் பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்க வேண்டும் அதேபோல குழந்தை திருமணங்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.


இன்றைய நிலையில் கல்வி கற்றால் மட்டுமே அடுத்த நிலைக்குச் செல்ல முடியும் எதிர்வரும் சந்ததியினர் உயர்ந்த நிலையை அடைய கட்டாயம் உயர் கல்வி வரை பயில வேண்டும். மேலும் உயர்கல்வி படித்த பின்பு தொழில் தொடங்க அரசு கடன் உதவிகளை உங்களுக்கு அதிக அளவில் வழங்கியுள்ளது அவற்றையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு சிறுபான்மை மக்களின் மேம்பாட்டுக்காக தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் தங்களுக்குள்ள பிரச்சனைகளை தெரிவித்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் இந்த சிறுபான்மையினர் தின விழாவில் அரசின் நல திட்டங்களை முறையாக பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.


நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட கிறித்துவ மகளிர் உதவும் சங்கத்தின் மூலமாக சங்கத்தின் மூலம் பெறப்பட்ட நன்கொடை மற்றும் அரசின் இணை மானியம் இணைந்து ரூ.10 ஆயிரம் விதம் 14 ஏழ்மை நிலையில் உள்ள கிறித்துவ மகளிர்க்கு சுயதொழில் செய்திட தலா ரூ.10,000/- (ரூபாய் பத்தாயிரம்) விதம் ரூபாய் ஒரு லட்சத்து 40 ஆயிரம் நிதி உதவிக்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்கள் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ச.முரளி, மகளிர் திட்ட இயக்குனர் எம்.ரவிச்சந்திரன், கூட்டுறவு துணைப்பதிவாளர் சந்திரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராம்ஜிகுமார், கிறித்துவ மகளிர் உதவும் சங்கம் செயலாளர் பக்தகுமார், முஸ்லிம் மகளிர் சங்க செயலாளர் அப்துல்லா, மேல்விஷாரம் நகர மன்ற தலைவர் முகமது அமீன், சிப்காட் திருச்சபை தயாளராஜ், தமிழ்நாடு பௌத்தர்கள் சங்க பேரவை பொருளாளர் பார்த்திபன், ஜெயின் சங்கத் தலைவர் வர்த்தமான், சுரேஷ் ஜெயின், மற்றும் மேல்விஷாரம் கரீம், இமாம்,கத்தீப் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

No comments:

Post a Comment

Post Top Ad