ரத்தினகிரி அடுத்து மாங்குப்பம் கிராமம், ஸ்ரீ பொன்னியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு, 45-ஆம் ஆண்டு எருது விடும் திருவிழா. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 24 January 2024

ரத்தினகிரி அடுத்து மாங்குப்பம் கிராமம், ஸ்ரீ பொன்னியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு, 45-ஆம் ஆண்டு எருது விடும் திருவிழா.


ராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரி அடுத்து மாங்குப்பம்  கிராமம், ஸ்ரீ பொன்னியம்மன்  கோவில் திருவிழா முன்னிட்டு,  45-ஆம் ஆண்டு எருது விடும் திருவிழா மாங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர்,  ஆற்காடு ஒன்றிய கூட்டமைப்பின் துணைத் தலைவர் பூபாலன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு  அழைப்பாளராக  திமுக சுற்றுச்சூழல் அணியும் மாநில துணைச் செயலாளர் ஆர். வினோத் காந்தி கலந்து கொண்டு துவக்கி  வைத்தார். மாடு விடும் திருவிழாவில் பல  பகுதியில் இருந்தும் சுமார் 160-க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்டன. இதில் முதலில் வெற்றி பெற்ற குடியாத்தம் பகுதியை சேர்ந்த மக்களின் மன்னன் மாட்டின்  உரிமையாளருக்கு  ரூ.1,15,000, இரண்டாம் பரிசாக 95,000, மூன்றாம் பரிசு 75,000 என வழங்கப்பட்டது. மேலும், பங்கேற்ற 60 காளைகளுக்கு எண்ணிக்கையின்படி   உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


இந்நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, வட்டாட்சியர் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் பாரதி, கால்நடை மருத்துவர், தீயணைப்புத் துறையினர்,  துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு மற்றும் ரத்தினகிரி  காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி,  காவலர்கள்   100-க்கும்  மேற்பட்டோர் மற்றும்   இளைஞர்கள்,  ஊர் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


- வடமேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

No comments:

Post a Comment

Post Top Ad