வாலாஜா மற்றும் ஆற்காடு வட்டத்தில் 2 புறநகர் புதிய வழித்தட பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் ஆர்.காந்தி. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 24 January 2024

வாலாஜா மற்றும் ஆற்காடு வட்டத்தில் 2 புறநகர் புதிய வழித்தட பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் ஆர்.காந்தி.


கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் இன்று வாலாஜா ஊராட்சி ஒன்றியம், ராணிப்பேட்டை சிப்காட் பெல் (BHEL) நிறுவனம் பேருந்து நிறுத்தத்திலிருந்து சென்னை செல்லும் பேருந்தினையும், ஆற்காடு பேருந்து பேருந்து நிலையத்திலிருந்து தாம்பரம் வரை செல்லும் பேருந்தினையும் என மொத்தமாக 2 புறநகர் புதிய வழித்தட பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி, இ.ஆ.ப., அவர்கள் தலைமை தாங்கினார். ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். இந்நிகழ்ச்சிகளில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது.  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான மக்களாட்சியில் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து பொதுமக்களின் அடிப்படை வசதிகளை மக்கள் கேட்காமலேயே உடனுக்குடன் நிறைவேற்றி வருகின்றார்கள்.


முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்கும் பொழுதெல்லாம் மக்களின் வரிப்பணத்தினை தேவையற்ற திட்டங்களுக்காக வீணடிக்காமல் மக்களை கேட்காமலேயே மக்களுக்கான பயனுள்ள திட்டங்களை சிந்தித்து செயல்படுத்துவார்கள். அவ்வழியில் நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு துறைகளில் குறிப்பாக மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் 48, முதலமைச்சரின் காலை உணவு, புதுமைப் பெண், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட எண்ணற்ற பல மகத்தான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள்.


ராணிப்பேட்டை மாவட்டம் பொது மக்கள் நலன் கருதி ராணிப்பேட்டை சிப்காட் பெல் பேருந்து நிறுத்தத்திலிருந்து வாலாஜா வழியாக சென்னைக்கு காலை 6.30 மற்றும் பிற்பகல் 2 மணிக்கும், சென்னையிலிருந்து சிப்காட் பெல் ராணிப்பேட்டைக்கு காலை 10.20 மற்றும் மாலை 05.30 மணிக்கும், அதேபோன்று ஆற்காடு பேருந்து நிறுத்தத்திலிருந்து தாம்பரத்திற்கு சக்கரமல்லூர், வடஇலுப்பை, காஞ்சிபுரம் வழியாக காலை 5 மணிக்கும் இப்புதிய பேருந்துகள் செல்லும். பொது மக்கள் இந்த புதிய புறநகர் பேருந்துகள் சேவையினை இனிதே பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் பேசினார்கள்.


இந்நிகழ்ச்சிகளில் பொது மேலாளர் அரசு போக்குவரத்துக் கழகம் திரு.கணபதி,  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அசோக் மற்றும்  நகரமன்றத் தலைவர் திருமதி.தேவிபென்ஸ் பாண்டியன், தொமுச வேலூர் மண்டலம் பொது செயலாளர் , பெல் (BHEL) மேலாளர் சிவபிரகாசம், கிளை மேலாளர் திருமணி,மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


- வடமேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444 

No comments:

Post a Comment

Post Top Ad