சுய உதவி குழுபெண்களுக்கு கலாச்சாரத் திருவிழா; தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஓச்சேரி சந்தை மைதானத்தில் நடைபெற்றது. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 24 January 2024

சுய உதவி குழுபெண்களுக்கு கலாச்சாரத் திருவிழா; தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஓச்சேரி சந்தை மைதானத்தில் நடைபெற்றது.


ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட 29 ஊராட்சிகளில் உள்ள    சுய உதவிக்  குழுக்களில் செயல்பட்டு வரும்  பெண்களை   வட்டார இயக்க மேலாளர் பிரபாவதி, உள்ளிட்ட பி.மேனகா, பத்மபிரியா,  பாக்யவதி, சரளா, எம்.கீதா ஆகியோரின் ஒருங்கிணைப்பில் காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரி சந்தை வளாகத்தில்  கலாச்சார திருவிழா  நடைபெற்றது.

இந்த விழாவிற்கு துணைத் திட்ட அலுவலர்கள் மோகன் பாபு, அன்பரசன் ஆகியோர்  தலைமை தாங்கி விழாவினை தொடங்கி வைத்தனர், விழாவில் கலந்து கொண்ட சுய உதவிக் குழு பெண்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை  விளக்கும் வகையிலும் அதனை தடுப்பதைப் பற்றியும் கோலத்துடன் ஓவியங்கள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்களை எழுதி வைத்தனர் அதனைத் தொடர்ந்து ஓச்சேரி அரசு உயர்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் பாக்கியராஜ் ஒருங்கிணைப்பில் கயிறு, இழுத்தல், கபடி,பாடல் போட்டி போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.


விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட ஓச்சேரி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எம்.சதாசிவம், ஆயர்பாடி கிராம நிர்வாக அலுவலர் என்.புகேந்தி, ஓச்சேரி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.விஜயலட்சுமி ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர், இந்த விழாவில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad