பாணாவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மீண்டும் மகப்பேறு அறுவை சிகிச்சை முறை கொண்டு வர வலியுறுத்தி தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 2 February 2024

பாணாவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மீண்டும் மகப்பேறு அறுவை சிகிச்சை முறை கொண்டு வர வலியுறுத்தி தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!


ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ஒன்றியம், சோளிங்கர் அடுத்த பாணவரத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மீண்டும் மகப்பேறு அறுவை சிகிச்சை பிரிவை கொண்டு வந்து சிகிச்சை முறையை மேம்படுத்தவும், பாணாவரம் பகுதி பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிடவும் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கான ராணிப்பேட்டை மாவட்ட தேமுதிக-வின் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் பாணாவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றிய தேமுதிக செயலாளர். குணா தலைமையில், காவேரிப்பாக்கம் முன்னாள் ஒன்றிய அவைத்தலைவர் வி.எஸ்.விஜய் வரவேற்புரை, பொருளாளர். பாபு, வடக்கு அவைத்தலைவர். சேட்டு, காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர்கள். பழனி, ரவி, சுரேஷ் ,கீதா தாமு ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ராணிப்பேட்டை மாவட்ட செயலாளருமான. பி. ஆர். மனோகரன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து கண்டன உரையாற்றினார். இதில் மாநில தொழிற்சங்க துணைச் செயலாளர்கள். பாலாஜி,எஸ்.எஸ். தினகரன், மாநில மாணவரணி துணை செயலாளர். சந்திரமோகன், மாவட்ட அவைத்தலைவர். காசிநாதன், மாவட்ட பொருளாளர். அசோகன், மாவட்ட துணை செயலாளர். தினேஷ் குமார், ஏகாம்பரம், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள். முகமத் இப்ராஹிம், செல்வகுமார், அருள், பனப்பாக்கம் நகர செயலாளர். யுவராஜ், நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர். ஸ்ரீதர் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா 

No comments:

Post a Comment

Post Top Ad