ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த வேட்டாங்குளம் கிராமத்தில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நெமிலி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் வேட்டாங்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பொன்.கோ. சங்கர் தலைமையில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் வி.எஸ். முரளி கலந்து கொண்டு மகளிர் உரிமைத்தொகை, மகளிர் இலவச பேருந்து பயணம், பள்ளிகளில் காலை உணவு திட்டம், மகளிர் சுய உதவி குழுவின் நன்மைகள் ஆகியவை பற்றி பிரச்சாரம் செய்தார். இதில் முன்னாள் திமுக கிளை கழக செயலாளர்.மோகன், இளைஞர் அணி.பிரசாத் ஆகியோர் உடன் இருந்தனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment