நெமிலி அருகே வேட்டாங்குளம் கிராமத்தில் பாஸ்டர் கிறிஸ்டோபர், புனிதன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வி.பி.எஸ் நிகழ்ச்சி! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 26 May 2024

நெமிலி அருகே வேட்டாங்குளம் கிராமத்தில் பாஸ்டர் கிறிஸ்டோபர், புனிதன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வி.பி.எஸ் நிகழ்ச்சி!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த வேட்டாங்குளம் கிராமத்தில் ரெட்டிவலம் சர்ச் சார்பில் பாஸ்டர். கிறிஸ்டோபர், புனிதன் தலைமையில் வி.பி.எஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி மாணவர்களின் கோடைகால விடுமுறையை பயனுள்ள பொழுதாக கழிக்க ஒரு வாரம் ஜெபம், பாடல், வசனம், நாடகம் என மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து இந்த வி.பி.எஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 


இதில் சிறு பிள்ளைகளின் ஆடல், பாடல் நிகழ்ச்சியுடன் முகுந்தன், பிரதிஷ்  அவர்களின் தாய் சொல்லை தட்டாதே என்ற சமூக விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் முடிவில் அனைத்து மாணவர்களுக்கும் பாஸ்டர். கிறிஸ்டோபர், புனிதன் அவர்கள் பரிசுப் பொருட்களை வழங்கினார். இதில் சந்தியா, பிரியா, ராதிகா, தானிய பிரியங்கா, சர்மிளா, ஜீவ லட்சுமி ஆகிய நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் உடன் இருந்தனர். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad