ராணிப்பேட்டை மாவட்டம் கலவை ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களின் கிராமப்புற வேளாண் பயிற்சி மற்றும் கிராமப்புற வேளாண்மை இயற்கை முறை உரம் கண்காட்சி வாணாபாடி சமுதாயக் கூடத்தில் வெள்ளியன்று (மே. 24) விவசாயிகள் ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.
இதில் வேளாண்மை அலுவலர்கள் ஞானசௌந்தரி, முத்துக்குமார், கிராம நிர்வாக அதிகாரி அதியமான், விவசாயிகள் குழு உறுப்பினர்கள் சுந்தரமூர்த்தி, வேலு, முருகேசன், புருஷோத்தமன், வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
பி.எஸ் சி. (Hons.) விவசாயம் இறுதி ஆண்டு மாணவர்கள் முருகானந்தம், தீபக், மோகன்ராஜ், நவீன் குமார், நித்திஷ் குமார், நவீன் குமார் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு உள்ள ரசாயனங்கள் தவிர்த்து பூமியை பாதுகாக்க இயற்கை முறையில் 30 க்கும் மேற்பட்ட இயற்கை முறை மகசூல் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காட்டினார்.
- மாவட்ட செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
No comments:
Post a Comment