ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த குடிமல்லூர் அருகே, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்னை நோக்கி 1.5 கோடி மதிப்புள்ள 10 சொகுசு கார்களை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி நடுவழியில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பூனே நாக்பூரிலிருந்து சென்னை நோக்கி 1.5 கோடி மதிப்புள்ள 10க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை ஏற்றுக்கொண்டு கண்டைனர் லாரி சென்று கொண்டிருந்தது. சரியாக வாலாஜாபேட்டை அடுத்த குடிமல்லூர் அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக லாரியின் முன்பக்கம் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. சிறிது நேரத்தில் தீ மளமளவென லாரியின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியுள்ளது. இதனைக் கண்ட பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள், துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
- மாவட்ட செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
No comments:
Post a Comment