ராணிப்பேட்டை மாவட்டம் கலவை காவல் நிலையம் சார்பில் சர்வதேச போதை தடுப்பு தினத்தையொட்டி கலவை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் முள்ளுவாடி ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமை, பொருளாதார சீரழிவு, உடலில் ஏற்படும் பாதிப்புகள், போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் பெரும்பாலான வாலிபர்கள் தன்னையும், தன் நிலைமையையும் மறந்து கொள்ளை, கற்பழிப்பு, போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்
இவைகளிலிருந்து முழுமையாக விடுதலை பெறுவதற்கு போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை அறவே ஒழிக்க வேண்டும் என்பதை குறித்து மாணவர்களிடையே ஆய்வாளர் கவிதா விழிப்புணர்வு ஏற்படுத்தினார் அதனைத் தொடர்ந்து போதை தடுப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்
இந்நிகழ்வின் போது உதவி ஆய்வாளர்கள் ஆர்.பூஜா, கே சூர்யா மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- மாவட்ட செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
No comments:
Post a Comment